india

img

கார்ப்பரேட்டுகளின் பட்ஜெட்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம்....

புதுதில்லி:
முற்றிலும் கார்ப்பரேட் ஆதரவு அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டை எதிர்த்தும் எளிய மக்களுக்குஇலவச உணவு மற்றும் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டங்களையும் நேரடி பண பரிவர்த்தனையாக மக்களுக்கு நிதி அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டனம் முழங்குவீர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

மோடி அரசின் எட்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 1 திங்களன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் 2021-22இல் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் முற்றிலும் மக்களுக்கு எதிரான ஓர் ஒருங்கிணைந்த வஞ்சக, துரோகத் திட்டமே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள விமர்சன அறிக்கையில், “கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பெருந்தொற்று ஆகிய இரட்டை நெருக்கடிகளில் சிக்கிய மக்களுக்கு முற்றிலும் துரோகமிழைக்கிற நடவடிக்கையே இந்த பட்ஜெட். விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய வெகுசில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை மட்டுமே மேம்படுத்துவதில் மோடி அரசு அசைக்க முடியாத உறுதியைக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த பட்ஜெட்டை விட சிறந்த உதாரணம் வேறு இல்லை” என்று கூறியுள்ளது. 

பொதுச் செலவினத்தை பெரு மளவிற்கு அதிகரித்துவிட்டதாக அரசு படாடோபமாக இந்தபட்ஜெட்டில் கூறிக்கொண்டிருக் கிறது; ஆனால் உண்மையில் 2020-21 பட்ஜெட்டில் இந்த அரசு பொது செலவினத்திற்காக ஒதுக்கிய தொகையுடன் ஒப்பிடும்போது, அத்தொகையின் உண்மை மதிப்பில், தற்போது ஒதுக்கியுள்ள 34.8லட்சம் கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய வீழ்ச்சியே ஆகும் எனக்குறிப்பிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்ற பொறுப்பி லிருந்து அரசு முற்றாக விலகிச் செல்கிறது என்பதையே இது உணர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், நாட்டின் உற்பத்தி சக்திகள் மீதான மிகப்பெரிய அளவிலான கட்டுப்பாட்டை வெகுசில பெரும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக் காக அரசு திருப்பிவிடுகிறது என்றும் மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் தனதுபட்ஜெட் உரையில், 2020-21ன் பட்ஜெட்டின்போது பல்வேறு இனங்களுக்கு செய்த ஒதுக்கீடு தற்போது கடுமையாக வெட்டப்பட்டிருக்கிறது என்பதை சொல்ல மறுத்தார். விவசாயம், கல்வி, சமூக நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, அறிவியல் துறைகள், நகர்ப்புற மேம்பாடு, ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகடுமையாக வெட்டப்பட்டி ருக்கிறது என்று சுட்டிக்காட்டி யுள்ள மார்க்சிஸ்ட் கட்சி, சுகாதாரத்துறைக்கு மிக அதிகமாகநிதியை தற்போது ஒதுக்கீடு செய்வதாக மத்திய நிதி அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், அவர் வெளியிட்ட பட்ஜெட் விபரங்கள், தற்போதைய ஒதுக்கீடான ரூ.74ஆயிரத்து 600 கோடி என்பது கடந்த பட்ஜெட்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட ரூ.8ஆயிரம் கோடி குறைவு என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது என்றும் சாடியிருக்கிறது.

பெட்ரோல்-டீசல் மீது விவசாயத்தின் பெயரில் புதிய வரி

எல்ஐசி, பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா விற்பனை

துறைமுகங்களில் தனியார் பங்களிப்புக்கு கதவு திறப்பு

திருக்குறள்களை மேற்கோள்காட்டி பம்மாத்து

பட்ஜெட் 2021 விபரம் உள்ளே..... 

;