india

img

உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கும் பாஜக தலைவர்கள்.... மத்தியப்பிரதேசம், ஹரியானாவில் திருடுபோகும் தடுப்பூசிகள்.....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனாவின் 2-ஆவது அலை அதிதீவிரமடைந்துள்ளது. புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்குகொரோனா உறுதி செய்யப்பட்டுள் ளது. 2 ஆயிரத்து 104 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து,ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு பல இடங்களில் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. இது பல இடங்களில் திருட்டுக்கும் வழிவகுக்க ஆரம்பித் துள்ளது. அதாவது, கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருத்துகளை மருத்துவமனைகளில் இருந்து திருடி, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கும் வேலைகளை சிலர் ஆரம்பித்துள்ளனர்.பாஜக ஆளும் ஹரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,710 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இதில் 1,270 கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் ஆகும். ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் இந்த மருத்துவமனையில் இருந்தே கொரோனா தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையின் குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 1,710 கோரோனா தடுப்பூசி டோஸ்களும் மாயமாகியுள்ளன. இதேபோல, பாஜக ஆளும்மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரிலுள்ள ஷல்பி மருத்துவமனையின் மருந்துக் கிடங்கில் இருந்தும் 137 ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்துக் குப்பிகள் மாயமாகியுள்ளன.குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்களே ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

;