india

img

இலவச ரேசன் வழங்கும் பைகளில் பிரதமர் படம், தாமரை சின்னம்... அரசுப் பணத்தில் பாஜக தேர்தல் ஆதாயம்...

புதுதில்லி:
பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ், இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் மையங்களில் பிரதமர் மோடி மற்றும் தாமரைச் சின்னத்துடன் கூடிய விளம்பர பேனர்களை வைக்குமாறு, தங்களது ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் 2-ஆவது அலையில் மக்களின் பொருளாதார கஷ்டங்களை குறைக்கும் வகையில், 2021 மே,  ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு ரேசன் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலமான இந்தத் திட் டத்தின் கீழ், நாடு முழுவதும் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றுகூறிய பிரதமர் மோடி, திட்டத்தை நவம்பர் வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.
இந்நிலையில்தான், இந்த திட்டத்தை தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ரேசன் கடைகள் முன்பு பிரதமர் மோடி, தாமரைச் சின்னம் ஆகியவற்றுடன் கூடிய விளம்பரப் பேனர்களை வைக்க பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. ரேசன் கடைகளில் வைக்கப்படவேண்டிய பேனர் வடிவமைப்பின்மாதிரியும், பாஜக தில்லி அலுவலகத்தால் உருவாக்கப்பட்டு, மாநிலகிளைகளுக்கு அனுப்பப்பட் டுள்ளன. மேலும், இது தொடர்பாக பாஜகவின் அனைத்து மாநில பிரிவுகளுக்கும் கடிதம் அனுப்பியிருக் கும் பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங், “இலவச உணவுதானியங்களை வழங்கும் ரேசன் பைகளில் பாஜகவின் சின்னமான தாமரை இடம்பெறவேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.பாஜக ஆளாத மாநிலங்களிலும் ரேசன் பைகளில் தாமரை சின்னம் இடம்பெற வேண்டும் என்று அவர் கூறியிருப்பதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.

;