india

img

காலத்தை வென்றவர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீரர் அருணா ஆசஃப் அலி பிறந்த நாள்..

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் அருணா 1909ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் பிறந்தார்.அருணா ஆசஃப் அலி பிரிட்டிஷ் பஞ்சாப் மாநிலத்தின் (இன்றைய அரியானா மாநிலம்) கல்காவில் வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். லாகூர் மற்றும் நைனிடாலில் படித்தவர். பட்டம் பெற்ற பின்னர் கொல்கத்தாவின் கோபால கிருஷ்ண கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆசப் அலியை அலகாபாத்தில் சந்தித்தபிறகு பெற்றோர்களின் எதிர்ப்பையும் சமயவாதிகளின் எதிர்ப்பையும் இருபது ஆண்டுகளுக்கும் கூடுதலான அகவை வேறுபாட்டையும் மீறி 1928ஆம் ஆண்டு அவரை திருமணம் புரிந்து கொண்டார்.

அருணா இந்திய தேசிய காங்கிரசின் துடிப்பான அங்கத்தினராக விளங்கினார். உப்பு சத்தியாக்கிரகத்தின்போது சிறை சென்றார். அரசியல் கைதிகளை விடுவித்தபோது இவரை விடுவிக்காததால் மக்கள் போராட்டம் நடந்தது. அதன்பின்னரே விடுவிக்கப்பட்டார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை பலத்த தடைகளை மீறி ஏற்றினார். விடுதலைக்குப் பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி பல சோசலிச இயக்கங்களில் செயல்பட்டார். 1958ஆம் ஆண்டு தில்லியின் முதல் மேயராகதேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் எடதாதா நாராயணனுடன் இணைந்து பேட்ரியட் இதழையும் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அருணா ஆசஃப் அலிக்கு 1997ஆம் ஆண்டு மறைவிற்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பெரணமல்லூர் சேகரன்

;