india

img

காலத்தை வென்றவர்கள் : அஸ்கர் அலி என்ஜினியர் பிறந்த நாள்....

அஸ்கர் அலி என்ஜினியர் 1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் பிறந்தார்.

அஸ்கர் அலி என்ஜினியர்  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர். இவர் மதச்சார்பின்மை கோட்பாட்டை உயர்த்திப்பிடித்தவரும் வகுப்புநல்லிணக்கத்திற்குப் பாடுபட்டவரும் இஸ்லாமிய சீர்திருத்தவாதியுமாவார். மதச்சார்பின்மை மற்றும் இஸ்லாமிய நெறி குறித்து ஏராளமான நூல்களையும் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மதக்கலவரங்கள் குறித்து அவர் விரிவான கட்டுரைகளை எழுதினார். “வாழும் உண்மை: அமைதி, நல்லிணக்கம், சமூக மாற்றத்துக்கான எனது தேடல்” என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் சுய சரிதை நூல் அவரது வாழ்க்கை லட்சியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

1993ஆம் ஆண்டு ‘சமூகம் மற்றும் மத நல்லிணக்கத்திற்கான ஆய்வு மையம்’ ஒன்றைத் துவக்கி மக்கள் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர் அஸ்கர் அலி என்ஜினியர்.சமூக நல்லிணக்கத்திற்காக அவரது பங்களிப்பைப் பாராட்டி 1990ல் டால்மியா விருது அவருக்கு வழங்கப்பட்டது.1987ல் அமெரிக்காவின் புகழ் பெற்ற விருதான சர்வதேச மாணவர் பேரவை விருது அவருக்கு வழங்கப்பட்டது.இவர் 2013ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் நாள் மறைந்தார்.

-பெரணமல்லூர் சேகரன்
 

;