india

img

போராட்டக்களங்கள் மீண்டும் கைவசமாயின.... நாடு முழுவதும் விவசாயிகள் கோபாவேசம்....

புதுதில்லி:
விவசாயிகளை போராட்டக்களங்களில் இருந்து வெளியேற்றும்முயற்சியை உ.பி. காவல்துறையினர் மேற்கொண்டதைத் தொடர்ந்து காசிப்பூரில் உள்ள போராட்ட மையத் திற்கு விவசாயிகள் திரண்டு வருகின்றனர். வியாழக்கிழமை இரவு தொடங்கிய விவசாயிகளின் வருகைவெள்ளிக்கிழமை தொடர்ந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல் காசிப்பூரில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர்திரண்டனர்.

சிங்கு, திக்ரி ஆகிய இடங்களும், தில்லி-உ.பி. எல்லையில் உள்ள காசிப்பூரும் போராட்டக்காரர்களின் கோட்டையாக மாறியது. உ.பி. அரசுஆயிரக்கணக்கான காவல்துறை மற்றும் துணை ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வெள்ளியன்று இரவில், உத்தரப்பிரதேசம், ஹரியானாவிலிருந்து டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களில் விவசாயிகள் இப்பகுதிக்கு விரைந்தனர். பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த விவசாயிகள் (திக்காயத்) காசிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்ப்பரேட் ஊடகங்களும் சங்க பரிவாரும்குடியரசு தின சம்பவங்களைத் தொடர்ந்து ஒரு பெரிய பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டதை அடுத்து உ.பி.காவல்துறையினர் போராளிகள் குவிந்த இடத்திற்கு வந்தனர். போராட்டக் களத்தை விட்டு வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பி.கே.யூ தலைவர் ராகேஷ் திக்காயத்துக்கு உத்தரவிட்டன. தண்ணீரும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டன. இதை அறிந்தவிவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஹன்னன் முல்லா, அசோக் தாவ்லே, விஜு கிருஷ்ணன், கே.கே.ராகேஷ், பி.கிருஷ்ணபிரசாத் ஆகியோர் வந்து விவாதித்தனர்.

இதற்கிடையில், காஜியாபாத் பாஜக எம்எல்ஏ தலைமையிலான குழு விவசாயிகளை தாக்க முயன்றது. மாவட்ட ஆட்சியரும் ஆணையரும் போராட்டக்காரர்களை பின்தொடர்ந்து கட்டாயப்படுத்தி நகர்த்தமுயன்றனர். கே.கே. ராகேஷ், திக்காயத் ஆகியோர் அவர்களை வலுவாகஎதிர்த்து நின்றனர். இதன் மூலம் மாவட்ட ஆட்சியரும் அவரது கைத்தடிகளும் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் போராட்டக் களத்தை பார்வையிட்டார். தண்ணீர் உள்ளிட்ட வசதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று சிசோடியா கூறினார். மூன்று விவசாய சட்டங்கள் வாபஸ் பெறும் வரை காசிப்பூரில் விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று தலைவர்கள் அறிவித்தனர்.

முசாபர்நகரில் மகா பஞ்சாயத்து
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில், மகாபஞ்சாயத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகஇணைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மகாபஞ்சாயத்து, உ.பி.-தில்லி எல்லையில் உள்ள காசிப்பூர் கிளர்ச்சி மையத் திற்கு பெருமளவில் செல்ல முடிவு செய்தது. சட்டங்கள் வாபஸ் பெறும் வரை காசிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.யில் உள்ள பாஜக அரசு காசிப்பூர் எதிர்ப்பு மையத்தை காலி செய்யமுயன்றதை அடுத்து இந்த மகாபஞ்சாயத்து உருவாக்கப்பட்டது. ஹரியானாவில், பானிபட் உட்பட பலமையங்களில் விவசாயிகள் மீண்டும்வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். எதிர்ப்பு மையங்களை காலி செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் மேலும் எதிர்ப்பு மையங் கள் திறக்கப்பட்டன. டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களில் அதிகமான விவசாயிகளை காசிப்பூருக்கு அனுப்பவும் கிசான் சபை முடிவு செய்துள்ளது.

மீண்டும் திறப்பு
ஹரியானாவின் கர்னாலில், காவல்துறை மற்றும் சங்க பரிவாரால் வெளியேற்றப்பட்ட தில்லி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விவசாயிகள் போராட்ட மையம் மீண்டும் திறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் வெள்ளிக்கிழமை கர்னால் சுங்கச்சாவடியில் அணிவகுத்து தங்கள்போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். கர்னால் சுங்கச்சாவடியைத் தவிர, சண்டிகர் தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பானிபட் சுங்கச்சாவடியிலும் விவசாயிகள் தங்கள்போராட்டத்தை மீண்டும் தொடங்கி
னர். சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு வசூல் நடத்துவதை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். பானிபட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங் கினர். தில்லி - ரோஹ்தக் சாலையில் உள்ள ரோஹ்தக் சுங்க சாவடியில் விவசாயிகள் மீண்டும் போராட் டத்தைத் தொடங்கியுள்ளனர்.

மும்பையில் பேரணி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி மும்பையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மும்பை புறநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணியையும் விவசாயிகள் நடத்தினர். புதிய சட்டங்கள்கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிர அமைச்சர் பச்சு காடு தலைமையிலான பிரஹார் என்ற அமைப்பின் ஆதரவோடுஇந்த போராட்டம் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது.

படக்குறிப்பு ... 

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியை முற்றுகையிட்டு போராடிவரும் விவசாயிகளில், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காசிப்பூர் எல்லையில் போராட வருகிறார்கள். அங்கு திடீரென பாஜக யோகி அரசு அராஜகத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. இதைக் கண்டித்து அங்கு இரவோடு இரவாக மேலும் பல்லாயிரக்கணக்கான உத்தரப்பிரதேச விவசாயிகள் கூடினர். அதுமட்டுமின்றி, மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பெரும்நகரமான முசாபர்பூரில் லட்சக்கணக்கான விவசாயிகள் கூடி, மாபெரும் விவசாய மகா பஞ்சாயத்து எனும் போராட்டத்தை, யோகி அரசுக்கு எதிராகத் துவக்கியுள்ளனர்.

;