india

img

ஏற்றுமதியை தடை செய்து, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுங்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்...

புதுதில்லி
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்து அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர்  மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர்  ராகுல் காந்தி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும்  கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால்  18வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  ஆனால், மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது.இதுகுறித்து  மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில அரசுகள் கூறுகையில், தடுப்பூசி மருந்து வழங்குவதில் மத்தியஅரசு பாரபட்சம் காட்டுவதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவிலான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளுக்கு மருந்துகள் அனுப்பி வைப்பதை நிறுத்தி விட்டு நமது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், நாட்டு மக்களுக்கே தேவையான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படாத நிலையில், கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் செயல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் அதில், கொரோனா தீவிரமாக பரவி வரும்காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவது என்பது தீவிரமான பிரச்சனை. இதை கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாநிலங்களுக்கு இடையே எந்தவிதமான பேதமும் பார்க்காமல், வேறுபாடு காட்டாமல்,  தடுப்பூசியை போதுமான அளவில் வழங்கி மத்திய அரசு உதவ வேண்டும். கொரோனா பரவலால் நம்நாட்டு மக்கள்உயிர்பயத்தால் அச்சத்துடன் இருக்கும்போது, தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது என்பது சரியான நடைமுறையா?.தடுப்பூசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். பிற தடுப்பூசிகளுக்கும்  விரைவான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடி அதைத் தோற்கடிக்க வேண்டும்  என்று அதில் தெரிவித்துள்ளார்.

;