india

img

துணை ராணுவம் தில்லியில் குவிப்பு...

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஜனவரி 26 அன்று தில்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீதுமத்திய பாஜக அரசின் காவல்துறை தாக்குதல் நடத்தியது. இதனை அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டித்துள்ளனர். 

இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவை தில்லி காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தித்து விளக்கினர். பின்னர் உயர் அதிகாரிகளைதனது இல்லத்துக்கு அழைத்து மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இந்த  கூட்டத்தில் உள்துறைசெயலாளர் அஜய் பல்லா, தில்லி காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா மற்றும்உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தில்லியில் 4 ஆயிரத்து 500 துணை ராணுவப்படையினருடன் கூடுதலாக 2 ஆயிரம் துணை ராணுவப்படையினரை குவிக்க முடிவு செய்யப்பட்டது. 

;