india

img

அசாம்-மிசோரம் போலீசார் மோதல்...

புதுதில்லி:
அசாம்-மிசோரம் மாநிலங்களின் எல்லையில் இரு மாநில காவல்துறையினருக்கு இடையே நடந்த மோதலில் 5 காவலர்களும் அப்பகுதி குடியிருப்புவாசி ஒருவரும் என 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரையிலும் இருமாநிலங்களின் காவல்துறை யினர் மோதிக் கொண்டதாக வரலாறு இல்லை என்றும் இரண்டு மாநிலங்களும் இந்தியாவின் ஒரு பகுதிதானா என்ற கேள்வி எழுகிறது என்றும் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.இரண்டு மாநிலங்களும் பாரதிய ஜனதா கட்சியால் ஆளப்படுபவை. இதில்அதிர்ச்சி என்னவென்றால் இரண்டு மாநில முதல்வர்களும், மேற்கண்ட கலவரமோதல் சம்பவத்தைத் தொ டர்ந்து டுவிட்டரில் மோதிக் கொண்டிருக்கின்றனர். மிசோரம் காவல்துறையினர், 

அசாமைச் சேர்ந்த காவல்துறையினர் 5 பேரை மேற்கண்ட கலவரத்தில் கொலை செய்ததை கொண்டாடியிருக்கின்றனர் என்று அசாம் முதலமைச்சர் ஹிமான்ந்தா பிஸ்வசர்மா குற்றம்சாட்டியுள்ளார். மிசோரம் முதலமைச்சர் ஜோரம் தங்கா, அசாம் காவல்துறையினர் தங்களது போலீசார் மீது தடியடி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். இருவரும் பரஸ்பரம் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவத்திற்கும் இரு மாநில காவல்துறையினர் மற்றும் முதல்வர்களின் அணுகுமுறைக்கும் அரசியல் அரங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய அரசு அனைத்து விசயங்களிலும் முற்றாக தோல்வியடைந்துவிட்டன என்பதன் உதாரணம்தான் அசாம் - மிசோரம் எல்லையில்நடந்த காவல்துறையினர் மோதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

;