india

img

வாக்குச்சாவடி நடைமுறைப்படி கொரோனா தடுப்பூசியை செலுத்த திட்டம்.....

புதுதில்லி:
வாக்குச்சாவடி நடைமுறையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் உலகை மக்களை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்த ஆண்டில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசி பணியை சரியாக செய்து முடிப்பதற்காக  தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள  719 மாவட்டங்களில் 285 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமையன்று நடைபெற்றது.இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்சவர்தன் தனது டிவிட்டர் பதிவில், தேர்தல் வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

இதுவரை, 719 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.நாட்டில் முதல் கட்டமாக, ஒரு கோடி மருத்துவப் பணியாளா்கள், 2 கோடி முன்கள பணியாளா்கள் என மொத்தம் 3 கோடி பேர்களுக்கு இலவச தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.   இரண்டாம் கட்டமாக ஜூலை மாதத்திற்குள் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்ட 27 கோடி முன்னுரிமை பயனாளர்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது குறித்த விரிவான நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தடுப்பூசிதொடர்பான தவறான வழிகாட்டுதல்களை யும் வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

;