india

img

மனித உரிமைகள் ஆணையத் தலைவராகும் அருண் மிஸ்ரா..? மோடியை துதிபாடியதற்கு பரிசு...

புதுதில்லி:
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து, கடந்த 2020 செப்டம்பர் 3 அன்று ஓய்வு பெற்றவர் நீதிபதி அருண் மிஸ்ரா. 

முன்னதாக இவர், நீதிபதியாக இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியை ‘சர்வதேசஅளவில் பாராட்டப்பட்ட ஒரு தொலைநோக்கு பார்வையாளர்’ என்று வர்ணித்திருந்தார். ‘மோடி ஒரு பல்துறை வித்தகர்- மேதை’ என்றும், ‘உலகளாவிய அளவில் சிந்திக்கவும் உள்நாட்டில் செயல்படுவதற்குமான திறமையான ஒரு தலைவர்’ என்றும் துதி பாடியிருந் தார்.இதற்கு நீதித்துறை வட்டாரத்தில் கடும் சர்ச்சைகளை உருவாக்கியதுடன், நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தித் தந்தது. அந்த பெயருடனேயே அவர் ஓய்வும் பெற்று விட்டார்.

இந்நிலையில்தான், நீதிபதி அருண் மிஸ்ரா அடுக்கிய ‘ஐஸ்’ கட்டிகளால், அப் போதே பிரதமர் மோடி மனம் குளிர்ந்து போனதாகவும், இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிஅருண் மிஸ்ராவுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலைவர் பதவியை பரிசளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

;