india

img

அசோக் நகர் மசூதி தீ வைப்பில் புகார் கொடுத்தவரையே கைது செய்வதா? தில்லி போலீசாருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்...

புதுதில்லி;
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய இஸ்லாமியர்கள் மீது, கடந்த 2020 பிப்ரவரியில் சங்-பரிவார் அமைப்புக்கள் கொடூர வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் 53 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். 

இந்த வன்முறைச் சம்பவத்தின் போது, இஸ்லாமியர்களின் சொத்துக் கள் குறிவைத்துச் சூறையாடப்பட்டன. மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் தீவைக்கப்பட்டன.இவ்வாறு தீ வைக்கப்பட்ட மசூதிகளில், அசோக் நகரில் இருந்த மதீனாமஸ்ஜித் மசூதியும் ஒன்றாகும். இங்குதிடீரென புகுந்த சிலர், மசூதிக்கு தீ வைத்ததுடன், அங்கு காவிக்கொடியையும் ஏற்றினர். இதுதொடர்பான வழக்கு தில்லிநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், போலீசாரின் நடவடிக்கைகள் அதிருப்தியும், வேதனையும் அளிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.அசோக் நகர் மசூதி எரிக்கப்பட்டதுதொடர்பாகத் தனி எப்ஐஆர் பதிவு செய்யுமாறு, 2021 பிப்ரவரியில் தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. 2021 மார்ச்சில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மசூதிஎரிப்பு தொடர்பாக கடந்த ஆண்டே எப்ஐஆர் பதிவு செய்து விட்டதாகவும், நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தவறுதலாக அதைக் குறிப்பிடவில்லை என்றும் தில்லி போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மசூதி எரிப்பு வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசாரின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “இதற்கு முன் இத்தனை நாளாக நடைபெற்ற விசாரணையில்- மசூதி எரிக்கப்பட்டது தொடர்பாகத் தனி வழக்கு பதிவு செய்ததாக போலீசார் எங்கும் குறிப்பிடவில்லை. இது விசாரணை அமைப்பின் மோசமான அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. வழக்கு விசாரணை குறித்துமுழு தகவல்களையும் அளிக்க வேண்டியது போலீசாரின் பொறுப்புதான்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.மேலும், எந்த மசூதி எரிக்கப்பட் டதோ அதே மசூதியின் நிர்வாகி ஹாஷிம் அலி என்பவரையே போலீசார்கைது செய்திருப்பதையும், அவரை நரேஷ் சந்த் என்பவரின் கடை கொள்
ளையடிக்கப்பட்ட வழக்கில் சேர்த்திருப்பதையும் நீதிபதிகள் கண்டித்தனர். “புகார் அளித்த ஹாஷிம் அலியையே கைது செய்தது தில்லி போலீசாரின் அபத்தமான நடவடிக்கை!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

;