india

img

ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தில் கார்ப்பரேட்டுகளா? அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு...

புதுதில்லி:
விமானப் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது ஆழ்கடல் போக்குவரத்தையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்க ஒன்றிய மோடி அரசாங்கம் முன்வந்திருப்பதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அகில இந்திய விவசாய சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே மற்றும் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

ஒன்றிய மோடி அரசாங்கம், விமானப் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது ஆழ்கடல் போக்குவரத்தையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்க முன்வந்திருப்பதற்கு, அகில இந்தியவிவசாயிகள் சங்கம் தன் ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் தெரிவித்துக் கொள் கிறது. ஆழ்கடலில் தொழில்நுட்பங்களின் வள ஆதாரங்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டுசேர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அனுப்பியிருந்த முன்மொழிவுக்கு  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அகில இந்தியவிவசாயிகள் சங்கம் கோருகிறது.

கடல் வளங்களை வணிகமயமாக்கு வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள மற்றுமொரு முயற்சியே இது என அகில இந்திய விவசாயிகள் சங்கம் இதனைக் கடுமையாக ஆட்சேபிக்கிறது.இத்தகைய மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்போதுகூட பாஜக அரசாங்கம் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் நடந்துகொள்வதிலிருந்து, அரசாங்கம் தனியார் கார்ப்பரேட் நலன்களுக்காகவும் அவைபுதிய வழிகளில் நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டவும் அவசரகதியில் நடவடிக்கை எடுக்கத் தள்ளப்பட்டிருப்ப தாகவே அகில இந்திய விவசாயிகள் சங்கம்முடிவுக்கு வருகிறது. இதனால் நம் கடல்மற்றும் கடற்கரை சூழலியல்கள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதைப் பற்றியோ, தனியார், கடல்வளங்களைத் தங்கள் இஷ்டம்போல் சுரண்டுவதற்கு வழியேற்படுத்தித்தரும் என்பது குறித்தோ கொஞ்சமும் கவலைப்படவில்லை. இந்நடவடிக்கை, கடலையே சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களின் மீது கடும் தாக்குதலை ஏற்படுத்திடும்.

“2021-2030 நிலையான வளர்ச்சிக்காக பெருங்கடல் அறிவியல் பத்தாண்டுகள்” தொடர்பாக ஐ.நா.மன்றத்தின் பிரகடனங்களின் அடிப்படையில் ஒன்றிய அரசாங்கம் சுற்றுச்சூழல் அமைப்பு எதையுமோ அல்லது கடலை நம்பி வாழும் அமைப்புகள் எதனிடமோ எவ்விதமான ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல், அவற்றைக் கேலி செய்திடும் விதத்தில் ஒன்றிய அரசாங்கம்இந்நடவடிக்கையை எடுத்திருக்கிறது.   எனவே கார்ப்பரேட்டுகளைச் சம்பந்தப்படுத்தியுள்ள இந்த ‘‘ஆழ்கடல் திட்டத்தை’’ உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரு கிறது. (ந.நி.)

 

;