india

img

ஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....

புதுதில்லி:
தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி  சட்டமன்றத் தேர்தல்நடைபெறும் என்றும்  மே 2 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும்  தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  வெள்ளியன்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சானிட்டைசர், குடிநீர் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்படும். 

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்சனைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு தலைவணங்கு கிறோம். 

வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் அதிகரிப்பு  
80 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு தபால் வாக்களிக்கும் முறைஅமல்படுத்தப்படுகிறது.  80 வயதுக்குமேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்களிக்கலாம்; இல்லை யென்றால் நேரில் வாக்களிக்கலாம். கொரோனா அச்சுறுத்தல் கருதி

தொடர்ச்சி 3ம் பக்கம்

;