india

img

கே.கே. வேணுகோபாலுக்கு மீண்டும் ஓராண்டு பதவி நீட்டிப்பு.... மசூதி இடிப்பில் அத்வானிக்காக ஆஜரானவர்...

புதுதில்லி:
ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலுக்கு, இரண்டாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரோத்கி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த 2017-ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் (89), அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவடைந்த போது, அதனை மேலும் ஓராண்டுக்கு ஒன்றிய அரசு நீட்டிப்பு செய்தது. அதன்படி கே.கே. வேணுகோபாலின் பதவிக்காலம் 2021 ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.இந்நிலையில்தான் அதனை மேலும் ஓர் ஆண்டுக்கு ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. ஆகவே இனி 2022 ஜூன் 30-ஆம் தேதி வரை கே.கே. வேணுகோபால் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக நீடிப்பார்.அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், மொரார்ஜி தேசாயின் ஆட்சிக்காலத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்துள்ளார். ‘பத்ம பூஷன்’ மற்றும் ‘பத்ம விபூஷண்’ விருதுகளைப் பெற்றுள்ள இவர், பாபர் மசூதி வழக்கில் பாஜக மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானிக்கு ஆதரவாக ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;