india

img

‘சென்ட்ரல் விஸ்டா’விற்காக இடிக்கப்படும் புராதன கட்டடங்கள்.... சர்வதேச வரலாற்று அறிஞர்கள் - கலைஞர்கள் எதிர்ப்பு.... பிரதமர் மோடிக்கு கடிதம்.....

புதுதில்லி:
ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில்அமையவுள்ள புதிய நாடாளுமன் றத்திற்கான ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்திற்காக, தில்லியில் உள்ள புராதன நினைவுக் கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அதற்குஎதிர்ப்பு எழுந்துள்ளது.சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை,ஒட்டுமொத்தமாகவே மறுபரிசீலனை செய்யுமாறு உலகெங்கிலும் உள்ள வரலாற்று அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என 75 பிரபலங்கள், பிரதமர்நரேந்திர மோடிக்கு, கடந்தவாரம் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். குறிப்பாக, தில்லியின் தேசியஅருங்காட்சியகம், இந்திரா காந்திதேசிய கலை மையம் (ஐஜிஎன்சிஏ), தேசிய ஆவணக்காப்பகத்தின் இணைப்பு கட்டடம் மற்றும் சாஸ்திரிபவன், கிருஷி பவன், விஜியன் பவன்,குடியரசுத் துணைத் தலைவர் குடியிருப்பு, ஜவஹர் பவன் உள்பட மொத்தம் 4 லட்சத்து 58 ஆயிரத்து 820 சதுர மீட்டர் பரப்பளவு உள்ளகட்டடங்கள், சென்ட்ரல் விஸ்டாவுக்காக இடிக்கப்பட உள்ளன. 

தேசிய அருங்காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான விலைமதிப் பற்ற அரிய சிலைகள், சிற்பங்கள், விலைமதிப்பற்ற நாணயங்கள், ஓவியங்கள் மற்றும் பழங்கால நகைகள்உள்ளன. மேலும் வெண்கலத்திலான நடராஜர் சிலை, புத்தரின் நினைவுச் சின்னங்கள், தஞ்சை ஓவியங்கள்உள்ளன. தற்போது அவையனைத் தும் வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளன. இதுதொடர்பான தெளிவான தகவல்கள் இல்லை.உலகெங்கிலும், முக்கிய கலாச்சார நிறுவனங்களை விரிவுபடுத்துதல், இடமாற்றம் செய்தல் அல்லதுமறுவடிவமைத்தல் போன்ற திட்டங்களை இறுதி செய்வதற்கு முன்னர்,அது பரவலான ஆலோசனைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்படுகிறது. ஆனால், சென்ட்ரல் விஸ்டாமறு அபிவிருத்தி திட்டத்தின் ஒருதலைப்பட்ச மற்றும் அவசர அமலாக்கம் உலகளவில் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு மாறாக இயங்குகிறது. 

தேசிய ஆவணக்காப்பகத்தின் பிரதானக் கட்டடம் அப்படியே இருக்கும். இணைப்பு கட்டடம் இடிக்கப் பட்டு புதிய கட்டடம் கட்டப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இங்கு வைக்கப்பட்டுள்ள காப்பக பதிவுகளில் 45 லட்சம் கோப்புகள், 25 ஆயிரம் அரிய கையெழுத்துப் பிரதிகள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்கள் மற்றும் 1.3 லட்சம் முகலாயர் காலத்து ஆவணங்கள் உள்ளன. இந்நிலையில், தேசியஅருங்காட்சியக கலைப் பொருட்கள்எவ்வாறு சேமிக்கப்பட்டு, அதுவடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளின் அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, தேசிய அருங் காட்சியகத்தின் சேகரிப்பில் அதன் இருப்புக்களின் முழுமையான பட்டியல் இல்லாததால், புதிய கட்டடத் திற்காக இந்த ஆவணங்களை வேறுஇடங்களுக்கு மாற்றும்போது இவற்றில் பல மாயமாகக் கூடும் என்ற கவலை எங்களுக்கு எழுகிறது.எனவே, சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்காக புராதனச் சின்னங்கள் கொண்ட கட்டடத்தை இடிக்கக் கூடாது.

இதுதொடர்பான பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் வரை,திட்டத்தையே மொத்தமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வரலாற்றுஅறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரோமிலா தாப்பர் (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்-எமெரிட்டா), ராமச்சந்திர குஹா (வரலாற்றாசிரியர்), டிம் பாரிங்கர் (யேல் பல்கலைக்கழகம்), ஹோமி பாபா (ஹார் வர்ட் பல்கலைக்கழகம்), சுப்ரியா காந்தி, (யேல் பல்கலைக்கழகம்), நாராயணி குப்தா, (ஜாமியா மிலியா), விவேக் குப்தா, (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்), சுதிப்தா கவிராஜ், (கொலம்பியா பல்கலைக்கழகம்), கிளவுன் லோரி (நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம்), அனிஷ் கபூர் (கலைஞர்),ஓர்ஹான் பாமுக் (துருக்கிய எழுத்தாளர்) கலை வரலாற்றாசிரியர் நவினா நஜாத் ஹைதர் (லண்டன் ஆல்பர்ட் அருங்காட்சியகம்) உள்ளிட்டோர் கடிதத்தை எழுதிய குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

;