india

img

ரூ.6.28 லட்சம் கோடி கூடுதல்  செலவின பரிந்துரை....

புதுதில்லி:
2020-21 ஆம் நிதியாண்டின் துணை மானியகோரிக்கையின் ஒரு பகுதியாக ரூ.6.28 லட்சம் கோடிகூடுதல் செலவின பரிந்துரையை நாடாளுமன்ற ஒப்பு தலுக்காக மக்களவையில் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதில் ரூ.4.13 லட்சம் கோடி ரொக்க பரிந்துரையும், மீதமுள்ள தொகை அமைச்சகங்களின் சேமிப்பு அல்லது மேம்பட்ட ரசீதுகள் மூலமும் நேர் செய்யப்படும். இந்த தொகையில் ரூ.3.04 லட்சம் கோடி பொது விநியோகத்துக்கும், ரூ.49 ஆயிரம் கோடி ஆத்மநிர்பார் பாரத் அபியான் மூன்றாம் கட்ட செலவினங்களுக்கும் (யூரியா இறக்குமதி மானியம் உள்ளிட்டவை), ரூ.15ஆயிரம் கோடி பி.கே. மானியத்துக்கும் கோரப் பட்டுள்ளது.இதைத்தவிர மாநில அரசுகளுக்கு கடன் வழங்குவதில் ரூ.1.22 லட்சம் கோடியும், பாதுகாப்பு சேவைகளுக்கான மூலதன செலவாக ரூ.20 ஆயிரம் கோடியும் கோரப்படுவதாக அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

;