india

img

கொரோனா தடுப்பூசி செலுத்த, மருந்துகள் பெற ஆதார் கட்டாயமில்லை....

புதுதில்லி:
ஆதார் இல்லாவிட்டாலும் தடுப்பூசி, மருந்து வழங்க வேண்டும்; மருத்துவ மனையில் அனுமதிக்க மறுக்கக்கூடாது என ஆதார் ஆணையம் கூறியுள்ளது.ஒருவரிடம் ஆதார் கார்டு இல்லா விட்டாலும், தடுப்பூசி, மருந்துகள் வழங்கவும், சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கவும் மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையை மறுப்பதற் கான ஒரு காரணியாக ஆதாரை தவறாகப் பயன்படுத்தக்கூடாது எனவும் யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கவும், ரெம்டெசிவிர் மருந்து வாங்கவும் ஆதார் உள்ளிட்டஅடையாள அட்டையை பயன்படுத்து கின்றனர். இந்த சூழலில் யுஐடிஏஐ உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறதுஇது குறித்து யுஐடிஏஐ அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது: 12 இலக்க ஆதார் எண் இல்லாவிட்டாலும் நன்மையான திட்டங்கள், சேவைகள்தொடர வேண்டும். அரசின் பலன்கள் கிடைப்பதை மறுக்கக் கூடாது.  ஆதார் இல்லை என்பதற்காக ஆதார் சட்டத்தின்படி ஒருவருக்கு அத்தியாவசிய சேவைகள் அளிக்க மறுக்கக்கூடாது.குறிப்பாக ஆதார் அடையாள அட்டைஇல்லை என்பதற்காக ஒரு நபருக்கு தடுப்பூசி, மருந்து வழங்குதல், மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தல் போன்றவற்றை வழங்குவதை மறுக்கக் கூடாது. இதை துறை  சட்டம் 2016  தெளிவாக்குகிறது.  2017-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி வெளியான சுற்றறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.அப்படியும் சேவைகள் மறுக்கப்பட்டால் அதை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;