india

img

தில்லியில் ஒரு வாரம் பொது முடக்கம்.... முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு....

தில்லி:
தில்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்,திங்களன்று இரவு 10 மணி முதல் ஏப்.26 காலை 5 மணி வரை முழு பொது முடக்கம் அமலாகும் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
திங்களன்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தில்லியில் நாள்தோறும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை செயல்முறை உச்ச கட்டத்துக்கு வந்துவிட்டது. ஆனால் குலைந்துவிட்டது என்று சொல்லவில்லை, உச்சத்தை அடைந்துவிட்டது என்று சொல்கிறேன். சுகாதார செயல்முறை அதிகமான அழுத்தத்தில் இருக்கிறது. சுகாதாரச் செயல்முறை சரிந்து விழுவதற்குள் சில கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோரும், தொற்றுக்கு ஆளாவோரும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 25 ஆயிரம் பேர்  பாதிக்கப்பட்டால், சுகாதாரச் செயல் முறையே சீர்குலைந்துவிடும். மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.எனவே, திங்களன்று இரவு 10 மணி முதல் ஏப்.26 காலை 5 மணிவரை முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக தெரிவித்தார். அத்தியாவசிய சேவைகள், உணவு, மருத்துவ சேவைகள் தொடர்ந்துஇயங்கும். திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இதற்கான முறையான, விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்.இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

;