india

img

கொரோனா காலத்தில் 9000 குழந்தைகள் கடத்தல்? குழந்தைத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர்....

புதுதில்லி;
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில், சுமார் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும். அந்தகுழந்தைகள் அனைவரும் குழந்தைத்தொழிலாளர்கள் ஆக்கப்பட்ட நிலையில், தற்போது மீட்கப்பட்டு இருப்பதாகவும் ‘பச்சன் பச்சோ அந்தோலன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, குழந்தைகள் உரிமைகளுக்காக ‘பச்சன் பச்சோஅந்தோலன்’ என்ற தன்னார்வ அமைப்பைநடத்தி வருகிறார். இந்த அமைப்புதான் குழந்தைகள் கடத்தல் தொடர்பானபுள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.அதில், “ஏப்ரல் 2020 முதல் ஜூன்2021 வரை நாட்டில் கடத்தப்பட்ட 9 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குழந்தைதொழிலாளர்களாக பயன்படுத்தப் பட்டிருந்தனர். நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 3 ஆயிரத்து 183 கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலத்தில் 2 ஆயிரத்து 805 குழந்தைகளும், ஆந்திராவில் 593 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் 430 குழந்தைகள், குஜராத்தில் 333 குழந்தைகள் மீட்கப்பட் டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.2020 கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத்திரும்பிய பிறகு, நாட்டில் குழந்தைகள் கடத்தல் அதிகரிக்கும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்களும், மத்திய உள்துறை அமைச்சகமும் எச்சரித்திருந்தன.

ஊரடங்கினால் மூடப்பட்டு நஷ்டத்தில் இயங்கிவந்த ஆலைகள் மீண்டும் லாபத்தில் இயங்குவதற்காக குறைந்தஊதியத்திற்கு குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்தும் அபாயம்இருந்த காரணத்தால் மத்திய உள் துறை அமைச்சகமும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.இந்நிலையிலேயே, 2020 ஆகஸ்டுமுதல் அக்டோபர் வரையிலான காலத்தில் குழந்தைகள் கடத்தல் அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் பெற் றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாமல் குழந்தைகள் பயணிப்பது அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பேருந்துப் போக்குவரத்து மூலமாகவே குழந்தைகள் கடத்தல் நடந்துள்ளது.அதே 2020 ஆகஸ்ட் முதல் செப் டம்பர் வரையிலான காலத்தில் 400குழந்தைகள் மீட்கப்பட்டு, 100 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகள் செயல்படாத காரணத்தாலும், பொருளாதார சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநிற்கின்றனர். இவ் வாறு இடைநிற்கும் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். குழந்தைத் தொழிலாளர்ளுக்கு எதிரான முகாம் ஆய்வின்படி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்தமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப் பட்டு மீட்கப்பட்டுள்ளனர் என்று ‘பச்சன் பச்சோ அந்தோலன்’ தெரிவித்துள்ளது.

;