india

img

இந்தியாவில்தான் பெட்ரோல் 7 முறையும் டீசல் விலை 21 முறையும் குறைந்துள்ளதாம்..... கண்டுபிடித்துக் கூறியவர் பெட்ரோலியத்துறை அமைச்சர்.....

புதுதில்லி:
பெட்ரோல் விலை 7 முறையும், டீசல் விலை 21 முறையும் குறைந்துள்ளன என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டுபிடித்து நாடாளுமன்றத்தில் கூறினார்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துகொண்டுதான் வருகிறது.இதனால் வாகனஓட்டிகள் பெரும்அவதிப்படுகின்றனர். பெட்ரோல்,  டீசல்விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதனால் எளிய மக்களும் நடுத்தர மக்களும் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் மீது விழுந்துள்ள இந்த விலையுயர்வு சுமையை குறைக்க வேண்டும் என்று மக்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும் பல போராட்டங்களை நடத்தியும் மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளவே இல்லை. தற்போது லிட்டர்  90 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் நூறு ரூபாயை தாண்டி ‘செஞ்சூரி‘ அடிக்க ஓடிக்கொண்டிருக்கிறது. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி பாஜக அரசும் இந்திய பெட்ரோலிய கம்பெனிகளும் தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றன. விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத மோடி அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் விலையை பல முறை குறைத்துள்ளதாக அதிர்ச்சிக் குண்டை தூக்கிப்போட்டுள்ளது.இந்நிலையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் மத்தியபெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

300 நாட்களில் 60 முறை விலை உயர்வு 
அமைச்சர் அளித்த பதிலில், பெட்ரோலிய பொருட்கள் மீது வரிகள் விதிப்பதில் மிக கவனமாக செயல்படுகிறோம். கடந்த 300 நாட்களில் 60 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை 7 முறையும், டீசல் விலை 21 முறையும் குறைந்துள்ளன. சுமார்250 நாட்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை இல்லாத அளவில்பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துஉள்ளதாக சொல்வது தவறு என்று கூறிக்கொண்டார்.

;