india

img

6 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு....

புதுதில்லி:
நாட்டையே உலுக்கியுள்ள பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரிய திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு வியாழக்கிழமையன்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழனன்று மீண்டும் கூடியது. அப்போது, மாநிலங்களவைக்கு அமைச்சர்கள் வராதது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். அந்த துறை அமைச்சர்களுக்கு பதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரே தொடர்ந்து பதிலளித்து வருவதாக அவர் கூறினார்.  இதற்கு கொரோனா கட்டுப்பாடுகளே காரணம் என்று அவைத் தலைவர் பதிலளித்தார். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆளும் பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவையை முடக்கியதால் அவையை ஒத்திவைத்தனர்.  மக்களவையில்  நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களில் இடம்பெற்ற உறுப்பினர்கள்  விவரம் வெளியிடப்பட்டது.  இதைத்தொடர்ந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு  விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.ஆனால் விவாதம் நடத்த அனுமதிக்காமல் வியாழனன்று மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

;