india

img

50,484 போக்சோ வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன... அமைச்சர்....

புதுதில்லி:
போக்சோ சட்டத்தின் கீழ்  2021 மே மாதம் வரை நிலுவையில் இருந்த 50,484 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன என்று ஒன்றியபெண்கள்- குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிஇரானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் 2012ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஒன்றிய அரசின் திட்டம் மூலம், 389 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உட்பட, 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை நீதித்துறை அமைத்தது.நீதித்துறை தெரிவித்த தகவல்படி, 640 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், 338 போக்சோ நீதிமன்றங்கள் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ளன. இவை 2021 மே மாதம் வரை நிலுவையில் இருந்த 50,484 வழக்குகளை முடித்துள்ளன.மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போக்சோ சட்ட வழக்குகள், குற்றப் பத்திரிகைகள், தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகள், தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுஅமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் விதிமுறைகள் படி, நிறுவனம் சாரா குழந்தை பராமரிப்புக்காக ஒரு குழந்தைக்கு மாதத்தோறும் ரூ.2 ஆயிரம்  அளிக்கப்படுகிறது. ஒரு மாவட்டத்துக்கு ரூ.10 லட்சம் வரை இந்த நிதியளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;