india

img

கொரோனா கொள்ளையிலும் ரூ.5.57 லட்சம் கோடி வரி வசூல்.... வாரி அள்ளியது நரேந்திர மோடி அரசு....

புதுதில்லி:
நடப்பு 2021-22 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஒன்றிய அரசின் நிகர வரி வருவாய் 86 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 5 லட்சத்து57 ஆயிரம் கோடியாக அதிகரித் துள்ளது.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ளார். அதில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.“நடப்பு 2021-22 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஒன்றிய அரசின்நிகர நேரடி வரி வருவாய் ரூ. 2 லட்சத்து 46 ஆயிரத்து 519 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 783 கோடியாகவே நிகர நேரடி வரி வருவாய்இருந்த நிலையில், அது தற்போது109.03 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நிகர மறைமுக வருவாயும், இந்தக் காலகட்டத்தில் ரூ. 3 லட்சத்து 11 ஆயிரத்து 398 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்து 862 கோடியாகவே நிகரமறைமுக வருவாய் இருந்த நிலையில், அது தற்போது 70.3 சதவிகிதம்அதிகரித்துள்ளது.நிகர நேரடி வரி வசூல் ரூ. 2.46 லட்சம் கோடி, நிகர மறைமுக வரிவசூல் ரூ. 3.11 லட்சம் கோடி என ஒட்டுமொத்தமாக முதல் காலாண்டில் வரிவருவாய் வசூல் ரூ. 5 லட்சத்து
57 ஆயிரம் கோடியாக அதிகரித்துள் ளது. ஒட்டுமொத்தமாக இது 86 சதவிகித வரி அதிகரிப்பு ஆகும்” என்றுபங்கஜ் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

;