india

img

ஈரானுக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்... மத்திய அரசு தகவல்....

புதுதில்லி : 
ஈரான் நாட்டிற்கு மத்திய அரசின் சார்பில்  5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்வழங்கப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரிசியஸ் , மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.அந்த வகையில் ஈரான் நாட்டிற்கு மத்திய 
அரசின் சார்பில் மொத்தம் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஈரானுக்கு வழங்கப்பட்ட நிலையில் எஞ்சிய 3.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம்ஈரானை சென்றடையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

;