india

img

தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை.... இலங்கை கடற்படையினரை பிரதமர் கண்டிக்க வேண்டும்.... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்....

புதுதில்லி:
தமிழக மீனவர்கள் 4 பேரைக் கொன்ற இலங்கை கடற்படையினரை பிரதமர்மோடி கண்டிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். 

இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில்,  தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.கப்பல்கள் மோதியதால் தமிழக மீனவர்கள் இறந்தனர் என வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியது இலங்கையின் கருத்து’என்றுகூறினார்.இதைத் தொடர்ந்து அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசுகையில்,  ‘தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும்.இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையால் 245 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.அதிகரிக்கும் மீனவர்கள் கொலைகளை தடுக்க இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?’ என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழக எம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளிக்கையில், ‘ ஜனவரி 18 அன்று இரு தரப்பின் படகுகள் மோதிக்கொண்டதால் இலங்கை கடற்படைக்கும், மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த பிரச்சனை ஏற்பட்டதும் இந்தியா இலங்கை க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நமதுகண்டனத்தை அடுத்து, தமிழக மீன வர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டது குறித்து விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தர விட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் முடிவுகளுக்காக இந்திய அரசு காத்திருக் கிறது. அந்த முடிவுகளின் அடிப்படையில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் தாக்குதலை நிறுத்த வலியுறுத்துவோம்  என்றார்.

இதையடுத்து பேசிய திருச்சி சிவா, இலங்கை அரசு பிடித்துவைத்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வினவினார். இதற்கு அமைச்சரின் பதில்,  ‘இலங்கை சிறையில் தற்போது  இந்திய மீனவர்கள் ஒருவரும் இல்லை. இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள படகுகளில்முதற்கட்டமாக நல்ல நிலையில் உள்ள 62 படகுகளை மீட்க  இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று  தெரிவித்தார். 

;