india

img

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 30 ஆயிரம் குழந்தைகள்... குழந்தைகள் உரிமை ஆணையம் அதிர்ச்சி தகவல்....

 புதுதில்லி:
இந்தியாவில் கடந்த ஓராண்டில் 30,071 குழந்தைகள் தங்களது பெற்றோர்களை  இழந்துள்ளனர் என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கானதேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில்ஆவணங்களை தாக்கல் செய்துள்ளகுழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR),கடந்த 2020 ஏப்ரல் 1 முதல் நடப்பாண்டு ஜூன் 5 வரை 30 ஆயிரத்து 71 குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ளனர் என்றும்,  26,176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். 3,621 பேர் அநாதைகளாக மாறியுள்ளனர். 274 குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளனர் என்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் சுமார் 7,084 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். குழந்தைகளைப் பற்றிய எந்தவொரு ரகசிய தகவலும் பொதுகளத்தில் வைக்கப்படக்கூடாது அல்லது எந்தவொரு நபருக்கும், நிறுவனத்திற்கும் வழங்கப்படக்கூடாது என்று ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழிகாட்டுதல்களையும் முன்வைத்துள்ளது.பெற்றோரை குழந்தைகள் இழந்துள்ள நிலையில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும்அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்,எனவே இக்குழந்தைகளை பாதுகாக்கஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;