india

img

தடுப்பூசித் திருவிழா.... முதல் நாளில் 30 லட்சம் பேர்...

புதுதில்லி:
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தியாவில் தடுப்பூசி திருவிழா ஏப்.11 முதல் ஏப்.14 வரை நடைபெறுகிறது. இதில் முதல் நாளான ஞாயிறன்று 30 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன எனத் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதுவரை அங்கு 63,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கேரளா, கர்நாடகா, தில்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிக அளவில் பாதிப்பு காணப்படுகிறது.
நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரைஉயிரிழந்தோர் எண்ணிக்கை 1,70,179 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பரவல் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. 

மகாத்மா ஜோதிபா புலேவின் பிறந்த நாளான ஞாயிற்றுக்கிழமை முதல், பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தடுப்பூசி திருவிழா நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான ஞாயிறன்று 30 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதனால், இதுவரை 10,45,28,565 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஒரு நாள் சராசரி என்பது 40 என்ற எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

;