india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

ஸ்கூட்டியை கொளுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம்!

பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ஜம்மு - காஷ்மீரில் சிவசேனா கட்சியின் நிர்வாகிகள்மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசைக் கண்டித்து ழக்கங்களை எழுப்பிய அவர்கள், ஜம்மு நகரில்  ஸ்கூட்டியை தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சசிதரூர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் ஆட்டோவை கயிறுகட்டி இழுத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், பாட்னா செயலகத்திற்கு சைக்கிளில் சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

                                                  *******************

குளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல் விலை குறையும்!

“குளிர்காலம் முடிந்தபிறகு பெட்ரோல் - டீசல் விலை படிப்படியாக குறையும்” என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டிஅளித்துள்ளார். “சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், குளிர்காலம் முடிந்தபிறகு பெட்ரோல் டீசல் விலை குறையும். இது சர்வதேச விவகாரம். குளிர் காலத்தில் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் பெட்ரோல் டீசல் விலை உயரும். சீசன்முடிந்ததும் விலை குறைந்துவிடும்” என்று பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

                                                  *******************

அயோத்தி ஏர்போர்ட்டிற்கு ரூ. 1,250 கோடி ஒதுக்கீடு!

‘‘அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது.பிரமாண்டமாக இந்த விமான நிலையம் அமையும். இதற்கான செலவுக்காக முதற்கட்டமாக மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசும் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்’’ என்று உ.பி. சாமியார் முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துஉள்ளார்.

                                                  *******************

வீண் பயணத்தை தடுக்கவே கட்டணத்தை உயர்த்தினோம்..

ரயில் கட்டணத்தை உயர்த்தியது ஏன்? என்ற கேள்விக்கு இந்திய ரயில்வே நூதன விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. “கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் தொடர்கிறது. சில மாநிலங்களில் திடீரென உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வீண் ரயில் பயணத்தை தடுக்கவே, சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான கட்டணம், இந்த சிறப்பு ரயில்களுக்கும் வசூலிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

                                                  *******************

மோடி வசதிக்கேற்பவே தேர்தல் தேதி அறிவிப்பு?

“அசாமில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடத்தவும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தவும் முடியும் என்றால் மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன” என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். ‘24 பர்கானா’ என்ற ஒரே மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள மம்தா? பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் வசதிக்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதா? என்றும் கேட்டுள்ளார்.

;