india

img

தீக்கதிர் சிலவரிச் செய்திகள்...

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனைகள் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும்நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

                                                   *******************

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்கும் திட்டம் இல்லை என உத்தரப்பிர தேச மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.

                                                   *******************

மணிப்பூரில் 3.3 என்ற அளவிலும், ஹிமாச்சலப்பிரதேசத்தில் 2.4 என்ற அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. 

                                                   *******************

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

                                                   *******************

சத்தீஸ்கரில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த மாவோயிஸ்டுகளுடனான மோதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியானார்கள்.

                                                   *******************

ஒடிசாவின் கார்ல்பட் வனவிலங்கு சரணாலயத்தில் 6 யானைகள் பலியானதற்கு பாக்டீரியாதொற்றே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

                                                   *******************

பஞ்சாப் நேசனல் வங்கியில் வாங்கிய 14 ஆயிரம் கோடி கடனை திருப்பிச்செலுத்தாமல் ஏமாற்றி பிரிட்டனுக்கு தப்பி ஓடிய பிரபல வைர வியாபாரிநீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

                                                   *******************

அமெரிக்காவில் குடியுரிமை தேர்வில் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

                                                   *******************

வருவாய் கட்டண வசதிகள், ஓய்வூதியம், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்ற அரசு தொடர்பானவங்கி பரிவர்த்தனைகளை தனியார் வங்கிகள் கையாள்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

                                                   *******************

இங்கிலாந்துக்கான அமெரிக்க தூதராக லூசியானா மாகாணத்தை சேர்ந்த கறுப்பின பெண் லிண்டா தாமஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                                                   *******************

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி கால்இறுதிக்கு முன்னேறினார்.

                                                   *******************

இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டாக, 19 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-51 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிப்ரவரி  28 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது. 

;