india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சமூகவலைத் தளத்தில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்ட  சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

                                                                ******************

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து அங்குள்ள நதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.இதில் தொழிலாளர்கள் பலர் சிக்கினர். இதில் இதுவரை 70 உடல்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

                                                                ******************

இரட்டை அல்லது கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்திய, சா்வதேச உயா்கல்வி நிறுவனங் களுக்கான விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) இறுதிசெய்துள்ளது.மக்களின் கருத்துக் கேட்புக்காக இந்த வரைவறிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரி வித்துள்ளது.

                                                                ******************

எல்கா் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மும்பை உயா்நீதிமன்றம் 6 மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது.

                                                                ******************

திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 2 கூடுதல் நீதிமன்றங்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

 

                                                                ******************

கர்நாடக மாநிலம் ஹிரங்கா வல்லியில் உள்ள கல்குவாரியில்ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர்.

                                                                ******************

இலங்கை செல்வதற்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

                                                                ******************

11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

                                                                ******************

ரூ.110 கோடி புயல் நிவாரண நிதியைத் தகுதியில்லாதவர்கள் மோசடியாகப் பெற்ற விவகாரம் குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

;