india

img

தேர்தல் ஆணையத்தால்   2,301 கட்சிகள் அங்கீகரிக்கப்படாதவை... ஆய்வில் தகவல்....

புதுதில்லி:
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள  2,360 அரசியல்கட்சிகளில் 97.50 சதவீத அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாகும் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் என மொத்தம் 1,112 கட்சிகள்கடந்த 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி பதிவு செய்யப்பட்டிருந்தன. இது கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2019 ஆம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.2019 ஆம் ஆண்டு நிலவரப்படி 2,301 கட்சிகளாக அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த 2013 முதல் 2014 ஆம் ஆண்டுக்கு இடையே கட்சிகள் புதிதாகப் பதிவு செய்த எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டுக்கு இடையே 9.8 சதவீதம் புதிய கட்சிகள் பதிவு அதிகரித்துள்ளது.தேர்தல் ஆணையத்தில் இதுவரை 2ஆயிரத்து 360 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. இதில் 97.50 சதவீதம்அதாவது, 2 ஆயிரத்து 301 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாதவையாகும்.அதுமட்டுமல்லாமல் 2018-19 ஆம் ஆண்டில் 2,301 பதிவுசெய்த அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் 78 கட்சிகள்பெற்ற நன்கொடை குறித்த விவரங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. 2017-18 ஆம் ஆண்டில், 82 அரசியல் கட்சிகள் குறித்த நன்கொடை விவரங்கள் மட்டுமே அந்தந்த மாநில தேர்தல் ஆணைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில வாரியாகப் பார்த்தால், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 653 அரசியல் கட்சிகள்(28.38%) உள்ளன, அடுத்ததாக தில்லியில் 291 கட்சிகள்(12.65%), தமிழகத்தில் 184 கட்சிகள் (8%) உள்ளன.

;