india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே ‘ஹெலினா’, ‘துருவஸ்திரா’ என்ற 2 அதிநவீன ஏவுகணைகளை தயாரித்துள்ளது.

                                                                 ********************

ஹயன் அப்துல்லா என்ற  9வயது சிறுவன், ஒருமணி நேரத்தில் 172 உணவு வகைகளை சமைத்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

                                                                 ********************

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்பட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

                                                                 ********************

உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, ரிஷிகங்கா நதியையொட்டி உருவான செயற்கை ஏரியை, ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்தது.

                                                                 ********************

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். 

                                                                 ********************

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிறன்று (பிப்.21) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

                                                                 ********************

வங்கிகள் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கும் பாதுகாப்புப் பெட்டக வசதி (லாக்கா்) தொடர்்பான விதிகளை இந்திய ரிசா்வ் வங்கி 6 மாதங்களில் மேம்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

                                                                 ********************

கொரோனா தொற்றுக்கு பிறகு ஆயுா்வேதத் துறையின் பொருளாதார மதிப்பு 90 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தார்.

                                                                 ********************

ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என ஆய்வுக்குபின் வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

                                                                 ********************

உன்னாவ் சிறுமிகள் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

                                                                 ********************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.99 அடியாக குறைந்துள்ளது.

                                                                 ********************

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (‘பபாசி’) சார்பில் 44 ஆவது சென்னை புத்தகக் காட்சி இந்த ஆண்டு700 அரங்குகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

                                                                 ********************

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டது.

                                                                 ********************

மொழிவாரி சிறுபான்மையினர் கல்வி மற்றும் தொழில் துறையில் முன்னேற்றம் பெறுவதற்காக தனி கார்ப்பரேஷனை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

                                                                 ********************

நெல்லை-கங்கைகொண்டான் மற்றும் கோவில்பட்டி-கடம்பூர் ரயில்பாதை இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

                                                                 ********************

பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 92.59 ரூபாய் எனவும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்து 85.98 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                                                                 ********************

திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள்ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்கூறியுள்ளார்.

;