india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்..

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக பிப்ரவரி 25 ஆம் தேதி மத்திய ஆயுதப்படையின் 45 கம்பெனி காவல்துறையினர்  தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.

                                                           *************************

உன்னாவில் 2 தலித் சிறுமிகள் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக லக்னோ காவல்துறை தலைவர் லட்சுமி சிங் தெரிவித்துள்ளார். 

                                                           *************************

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் 86வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

                                                           *************************

அடுத்த 2 ஆண்டுகளில் 55 லட்சம் பேரை பி.எஃப் கணக்கிற்குள் கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

                                                           *************************

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பாகத் பர்சுல்லாவில் அடையாளம் தெரியாத நபர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர்.

                                                           *************************

எங்கள் போராட்டம் பலவீனம் அடையாது என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திக்காத் தெரிவித்துள்ளார்.

                                                           *************************

லடாக் பாங்காங் ஏரியின் தெற்கு, வடக்கு கரை பகுதியில் இருந்த படைகள் முழுமையாக வாபஸ் பெற்றுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த படையினர் தொலைவிலுள்ள முகாம்களுக்கு சென்றுள்ளனர் என ராணுவம் தெரிவித்துள்ளது.

                                                           *************************

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,நான்கு துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

                                                           *************************

சிக்கிமில் பனிப்புயலில் சிக்கிய 447 சுற்றுலாப் பயணிகள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ள தாக பாதுகாப்பு தொடர்பாளர் லெப்டினன்ட் பி.கோங்சாய் தெரிவித்துள்ளனர்.

                                                           *************************

மேகாலயா மாநிலத்தில் உள்ள கிழக்கு காஷி மலைப்பகுதியில் வெள்ளியன்று  காலை 7.54மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்ட ர் அளவுகோலில் 2.3 ஆக பதிவாகியிருந்தது.

                                                           *************************

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் பகுதியில் வெள்ளியன்று மாலை 4.38 மணிக்கு, 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

                                                           *************************

காஷ்மீர் ஷோபியானில் நடந்த என்கவுண்ட்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

                                                           *************************

கொரோனாவை தடுக்க செலுத்தப்படும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது.

                                                           *************************

நடுக்கடலில் படகு பழுதானதால் தத்தளித்த அந்தமான் மீனவர்கள் 5 பேரை, இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டு காரைக்கால் துறைமுகம் அழைத்து வந்தனர்.

                                                           *************************

குளிர்சாதன வசதியுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் பயணிக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                           *************************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.21 அடியிலிருந்து 104.10 அடியாக குறைந்தது. 

                                                           *************************

கொரோனா காலத்தில் ஊரடங்கு விதியை மீறியதாக, முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட தமிழகத்தில் பதிவான 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

                                                           *************************

சிண்டிகேட் உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டதைக் கண்டித்து திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                                                           *************************

ட்ரோன்கள் பயன்படுத்துவதற்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் ஆகியவை அனுமதி வழங்கியுள்ளன.

                                                           *************************

அவசர காலத்தில் பக்கத்து நாடுகளுக்கு சென்று வர டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் சிறப்பு விசா வழங்க பக்கத்து நாடுகள் பரிசீலிக்கலாம் என்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

                                                           *************************

விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக 10 மாவட்ட தலைநகரங்களில் 20 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட சந்தைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

                                                           *************************

ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்” ஊடகம், செய்திகளுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

                                                           *************************

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணைநடத்த சிறப்புக் குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ளது.

;