india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்..

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தனது டுவீட்டர் பதிவில், ‘‘என்ன ஒரு அருமையான பெட்ரோல் இன்னிங்ஸ். இந்த கடினமான சூழ்நிலையில் அடைந்த அருமையான சதம் இது. பெட்ரோலுடன் இணைந்து விளையாடிய டீசல் சிறப்பு. எளிய மக்களுக்கு எதிராக இதனை அடைவது கடினம். ஆனால் நீங்கள் அதனை சாதித்துக் காட்டியுள்ளீர்கள்’’ என கிண்டலடித்துள்ளார்.\

                                                                   ********************

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட னர். இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை குற்றம் அதிகம் நிகழும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது.

                                                                   ********************

இ ந்திய சைகை மொழி அகராதியி‌ன் 3 ஆ‌ம் பதி‌ப்பை ம‌த்திய சமூக நீதி ம‌ற்று‌ம் அதிகாரமளி‌த்த‌ல்துறை‌ அமைச்சர்  தாவ‌ர்​ச‌ந்‌த் கெலா‌ட் காணொலி மூல‌ம் வெளியி‌ட்டா‌ர். 

                                                                   ********************

பயிருக்கு ஏற்றப்படாத விலை உயர்வு, தற்போது பெட்ரோலுக்கு மட்டும் உயர்த்துகின்றனர் என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரி வித்துள்ளார்.

                                                                   ********************

ராஜஸ்தானை தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

                                                                   ********************

அண்டை நாடுகள் மற்றும் 25 உலக நாடுகளுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக, மத்திய வெளி யுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

                                                                   ********************

இணையவழியில் நடைபெறவுள்ள ‘பசு அறிவியல்’ தோ்வில் மாணவா்கள் திரளாகப் பங்கேற்பதை ஊக்கப்படுத்துமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

                                                                   ********************

புகழ்பெற்ற கவிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாகூரின் அமெரிக்க பயணத்தின் நூற்றாண்டு விழா அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் கொண்டாடப்பட்டது.

                                                                   ********************

உள்நாட்டு விமானங்களில் ஜனவரி 2020 முதல் தற்போது வரை 77 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

                                                                   ********************

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் வியாழனன்று மேலும் இரண்டு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியானர்களின் எண்ணிக்கை 60-ஆக அதிகரித்துள்ளது.

                                                                   ********************

கேரள மாநிலத்திலிருந்து புனே வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதாக, புனே மாநகராட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

                                                                   ********************

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைத் தொடர்ந்து இலவசமாக கேட்டு வாங்கும் கறிவேப்பிலையின் விலை ரூ.150 ஆக உயர்ந்துள்ளது குடும்ப தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

                                                                   ********************

தருமபுரி மாவட்டத்தில் புதியதாக வேளாண் கல்லூரி தொடங்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

                                                                   ********************

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்ப மனுத் தாக்கல் செய்யலாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

                                                                   ********************

சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்ற குஜராத் இளைஞருக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

                                                                   ********************

உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சியாகாது என கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், இலங்கை அகதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

                                                                   ********************

பெட்ரோல், விலை ஏற்றத்தினால் இந்திய பொருளாதாரம் பாதிக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

;