india

img

இந்தியா முழுவதும் 18 கோடி தடுப்பூசி மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தகவல்.....

புதுதில்லி:
கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 18 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் திங்களன்று  தெரிவித்துள்ளார்.

ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் கையிருப்பில் உள்ளதாகக் கூறியுள்ள ஹர்ஷவர்தன்,  அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்பது லட்சம் தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது என்றார்.17 கோடிப்பேர் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில்  20.31 லட்சம் பேர் 18 வயது முதல்  44 வயதிற்குட்பட்டவர்கள். கடந்த பத்து நாட்களில் 3.28 லட்சம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

;