india

img

விவசாயத்துக்கு ரூ.16.5 லட்சம் கோடி.... நபார்டு வங்கி முடிவு

கோவை:
2021- 22 ஆம் ஆண்டு விவசாயத்திற்கு ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக நபார்டு வங்கித் தலைவர் தெரிவித்தார்.\

இதுகுறித்து தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழ கத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் பொருளாதாரச் சங்கத்தின் 80-வது ஆண்டு ஆராய்ச்சி மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் புதனன்று தொடங்கியது.இதில் கலந்துகொண்ட  நபார்டு வங்கித் தலைவர் ஜி.ஆர்.சின்தாலா  செய்தியாளர்களிடம் கூறுகையில், விவசாயத்திற்கு உள்கட்டமைப்பு, கடன் வசதி, உற்பத்தி அவசியம். இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு 2020-21 ஆம் ஆண்டில் ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து, இதில் ரூ.12 லட்சம் கோடியை வழங்கி விட்டது. 2021-22 ஆம் ஆண்டில் ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

;