india

img

ஒரே நாளில் 11,106 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்...

புதுதில்லி:
 இந்தியாவில் பிப்ரவரி 14 அன்று ஒரேநாளில் 11,106 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். 

உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவர்களின் தீவிர முயற்சியால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 12 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தை தாண்டியது. 

இந்நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,194 
பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1கோடியே 09 லட்சத்து 04 ஆயிரத்து 940 பேராக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 92 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 642 பேராக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,106 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 06 லட்சத்து 11 ஆயிரத்து 731 பேராக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 37 ஆயிரத்து 567 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.  குணமடைந்தோர் விகிதம் 97.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.43 சதவீதமாக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.25 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை 82 லட்சத்து 63 ஆயிரத்து 858 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;