india

img

தீக்கதிர் உலகச் செய்திகள்....

திருவாரூரில் சசிகலா, இளவரசி, சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவித்துள்ளார்.

                                                         *******************

பிட்காயின் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களை ஒழுங்குபடுத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார்.

                                                         *******************

முக்கிய துறைமுகங்கள் மேலாண்மை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

                                                         *******************

உத்தரகண்ட் பெரு வெள்ளத்தில்காணாமல் போன மற்றும் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடிய வில்லை என்று போலீஸ் டிஜிபி அசோக் குமார் கூறினார்.

                                                         *******************

இந்தியாவில் 2020-2021 ஆம் நிதியாண்டில் இதுவரை வருமான வரி செலுத்திய 1.87 கோடி பேருக்கு ரூ. 1.91 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை புதன்கிழமையன்று தெரிவித்தது.

                                                         *******************

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட மோகன் சென்னை விமானநிலையத்தில் புதனன்று சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப் பட்டார்.

                                                         *******************

கேரள மாநில அரசின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த அரசு அதிகாரி வி.பி.ஜாய்  என்பவர் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இவர் மார்ச் 1 ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.

                                                         *******************

உத்தரப்பிரதேசம் சஹரான்பூரில் நடைபெற்று வரும் மகாபஞ் சாயத் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கலந்து கொள்ள இருந்த நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

                                                         *******************

கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் நடந்து வரும் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில், ஹொய்சாலா கட்டடக் கலையில் கட்டப்பட்ட சமண கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                                                         *******************

பிரிட்டனில் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதார செயலர் எச்சரித்துள்ளார்.

;