india

img

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி...

புதுதில்லி:
திரையரங்குகளில் இன்று (திங்கள்) முதல் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் குறையத்தொடங்கி யதையடுத்து, 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க  கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் திரையரங்குகளில் திங்களன்றுமுதல் 100 சதவீத இருக்கை களை பயன்படுத்தலாம் என்றும் திரையரங்கில் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும். திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
 

;