india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

டிரம்பிற்கு பிரச்சாரம் செய்தபோது வெளிநாடு என்று தெரியாதா?

“இந்தியாவிலுள்ள சில தேசியவாதிகள் அமெரிக்காவுக்குச் சென்றே டிரம்ப் அரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர். ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதைக் கண்டித்து இந்தியாவில் போராட்டங்கள் நடந்தன. அப்போதெல்லாம் யாரும் நம்மிடம் கேள்வி கேட்கவில்லை, ஆனால் ரிஹானா மற்றும் கிரேட்டா தன்பெர்க் பேசும்போது மட்டும் சலசலப்பு ஏற்படுகிறது” என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். நாம் ஒரு உலகளாவிய கிராமத்தில் வாழ்கிறோம் என்பதைபுரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

                                                    ******************

உருவப்படத்தை எரித்தெல்லாம் என்னை மிரட்ட முடியாது..!

விவசாயிகள் போராட் டத்தை ஆதரித்ததற்காக, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் மருமகள் மீனா ஹாரிஸின் உருவப்படத்தை பாஜக எரித்தனர். இந்நிலையில், அந்தபுகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள மீனா ஹாரிஸ், இப்படியெல்லாம் “என்னை மிரட்ட முடியாது. என்னை மவுனமாக்கவும் முடியாது” என பதிலடி கொடுத்துள்ளார். தில்லி காவல்துறை ‘வழக்கு பதிவோம்’ என மிரட்டிய நிலையில்,சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கும், இதேபோல “அச்சுறுத்தல் மூலம் எனதுநிலைப்பாட்டினை மாற்றிவிட முடியாது” எனபதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                    ******************

பேச்சு நடத்தும் 2 அமைச்சர்களும் விவசாயம் பற்றி தெரியாதவர்கள்

‘‘விவசாயிகளுடன் இரண்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதில் ஒருவரான வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங்தோமர் சிறந்த மனிதர். ஆனால் அவருக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது. மற்றொருவர்பியூஷ் கோயல். இவர் கார்ப்பரேட் செக்டாரின் செய்தி தொடர்பாளர். இவர்களுக்கு எப்படி விவசாயிகள் பிரச்சனை புரியும்?” என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள் ளார்.

                                                    ******************

ஆளுநரை அழைக்காமல்  பேரவையைக் கூட்டிய மம்தா!

மேற்குவங்க சட்டப் பேரவையின் 2021-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் துவங்கியுள்ளது. வழக்கமாக முதல் கூட்டம்ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம். ஆனால், ஆளுநர் ஜக்தீப் தன்காருர் உடனான மோதல் காரணமாக, அவரை உரையாற்ற வருமாறு முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கவில்லை. இதற்குஎதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 

                                                    ******************

இந்தியாவிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திய இலங்கை!

“இந்தியாவிடம் இருந்து பெற்ற 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் தொகையை திருப்பிச் செலுத்தி விட்டோம். உரிய காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இந்தத் தொகை செலுத்தப்பட்டு விட்டது” என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த தொகையை முன்கூட்டியே செலுத்தும்படி இந்தியா எந்த வகையிலும் வலியுறுத்தவில்லை என்றும் இருநாட்டு கூட்டு முயற்சிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் இலங்கை மத்திய வங்கிகுறிப்பிட்டுள்ளது.

;