india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

சமையல் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்வு!
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை, 2020 டிசம்பர் 2 ஆம் தேதி50 ரூபாயும், அதன் பிறகு டிசம்பர் 15 அன்று 50 ரூபாயுமாக மொத்தம் 100 ரூபாய்உயர்த்தப்பட்டது. 2021 ஜனவரியில் பெரிதாக விலை உயர்த்தப்படவில்லை. 2021 பிப்ரவரி 1 அன்று, வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) விலை மட்டும்190 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின்விலையும் பிப்ரவரி 4 அன்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

                                              **********************

விவசாயிகளின் மனநிலையை சிதைத்த பாஜக - ஆர்எஸ்எஸ்!

“சர்வதேச அளவில்விவசாயிகள் இந்தியாவின் உருவமாகி இருக்கின்றனர். அவர்களை இப்படிதுன்புறுத்துவது நியாயமற்றது. இது நிச்சயமாகஇந்தியாவின் நற்பெயருக்கு மிகப்பெரிய களங் கத்தை ஏற்படுத்தும். நாம் விவசாயிகளிடம் எப்படி நடந்து கொள்கிறோம், மக்களைஎப்படி வழி நடத்துகிறோம், பத்திரிக்கையாளர்களை எப்படி நடத்துகிறோம் என்பதைபொருத்துதான் இந்தியாவின் வெற்றி அமைகிறது. ஆனால் பாஜக - ஆர்எஸ்எஸ், விவசாயிகளின் மனநிலையை சிதைந்துள்ளது” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

                                              **********************

தமிழகத்தைப் பின்பற்றும் பீகார் மாநிலம்..!

பீகாரில் பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் ‘முக்கியமந்திரி கன்யா உத்தன் யோஜனா’திட்டம் உள்ளது. இதில், பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது. இந்த உதவித் தொகையை பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் என்றும் உயர்த்தி வழங்க நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

                                              **********************

சத்தீஸ்கரில் 16 வயது சிறுமி கும்பல் வல்லுறவு

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள் ளார். வழியில், தனது ஆண் நண்பனுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது அங்கு வந்த 9 பேர், நண்பனை அடித்து விரட்டிவிட்டு, சிறுமியை காட்டுப்பகுதிக்குள் தூக்கிச்சென்று கொடூரமானமுறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 2 பேரை மட்டும் கைது செய்துள்ளனர்.

                                              **********************

சிபிஐ இயக்குநராக (பொ)  பிரவீன் சின்ஹா நியமனம்!

சிபிஐக்கு புதிய இயக் குநர் நியமிக்கப்படும் வரை யில் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில் சிபிஐஇயக்குநர் ரிஷி குமார் சுக்லாவுக்கு பதிலாக பிரவீன் சின்ஹா சிபிஐ இயக் குநருக்கான பணிகளை
கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவித் துள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதன்படி, இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. பிரவீன் சின்ஹா சிபிஐ கூடுதல் இயக்குநராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;