india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

அலைபேசியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் குரல் வழி செய்தியை அகற்றுவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று மத்தியதகவல் தொடர்புத்துறை இணைய மைச்சர்  சஞ்சய் தோத்ரே மாநிலங் களவையில் தெரிவித்தார். 

                                          ********************

இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

                                          ********************

சென்னையில் நடைபெறும்  சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 75 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

                                          ********************

ஆந்திராவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிப்ரவரி 28 அன்று   அமேசானியா 1 மற்றும் 20 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி -51 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

                                          ********************

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என்று பெங்களூருவில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

                                          ********************

போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் ரோப்வே, கேபிள் கார் உள்ளிட்ட புதிய போக்குவரத்து வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்தியசாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

                                          ********************

பிரதமர் மோடி தலைமையில் பிப்ரவரி 20-ஆம் தேதி நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.

                                          ********************

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேர் உயிரிழந்தது குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர் மக்களவை சபாநாயகருக்கு  கடிதம் எழுதியுள்ளார். 

                                          ********************

யு.பி.எஸ்.சி. முதற்கட்ட தேர்வில் வயதுவரம்பு அடிப்படையில் கடைசி தேர்வாக இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை ஏற்பதாக உச்சநீதிமன்றத்தில் யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 

                                          ********************

இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி கோரிய விண்ணப்பம் வாபஸ் பெறப்பட்டது. மீண்டும் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

                                          ********************

இந்தியாவிலிருந்து 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

                                          ********************

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.25 உயா்த்தப்பட்டு, 735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது.

                                          ********************

2025-ஆம் ஆண்டுக்குள் உலகில்புற்றுநோயால் பாதிக்கப்படு வோரில் மூன்றில் இரண்டு பங்குபோ் வளரும் நாடுகளைச் சோ்ந்தவர் களாக இருப்பார்கள் என்று புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

;