india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் ஒடுக்கப்படுவது கவலை அளிப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்வி செயல்பாட்டாளரும், நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.

                                               *********************

பிப்.28ஆம் தேதியன்று மட்டும் 2,353 உள்நாட்டு விமானங்களில் 3,13,668 பேர் பயணம் செய்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின் உள்நாட்டு விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

                                               *********************

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 106 பேர் மரணமடைந்துள்ளனர்.

                                               *********************

கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிரம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் 87.25 சதவீத கொரோனா பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளன.

                                               *********************

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.

                                               *********************

கொரோனாவால் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், உலக நாடுகளின் கல்வி வளர்ச்சியை இந்த தொற்று அதிகமாக பாதித்திருப்பதாக உலக வங்கியின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

                                               *********************

கேள்வித்தாள் வெளியானதால், நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைத் தொடர்ந்து பேணும் வகையில் தேர்வை ரத்து செய்ய ராணுவம் முடிவெடுத்துள்ளது.

                                               *********************

தில்லி காவல்துறையினரில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

                                               *********************

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி பாக். கடற்படை,  17 இந்திய மீனவா்களை கைது செய்துள்ளது.

                                               *********************

போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

                                               *********************

பீகாரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவன் ஒருவன் பலியானான். 2 பேர் காயமடைந்தனர். 

                                               *********************

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில், மத்திய - மாநில சுகாதார துறை செயலாளர்கள்உட்பட 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                               *********************

தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

                                               *********************

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

                                               *********************

சமையல் எரிவாயு உருளை விலை மூன்றே மாதங்களில் ரூ.225 உயர்த்தப்பட்டிருப்பதற்கு மதிமுகபொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

                                               *********************

மதுரவாயல் -  வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

;