india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

தங்கப்பத்திர விற்பனை இன்று (பிப்ரவரி 1) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,912-ஆக நிர்ணயித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

                                                 ****************

ரூ.1.3 லட்சம் கோடியில் 144 நவீன ஜெட் விமானங்களை வாங்க இந்திய விமானப்படைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

                                                 ****************

ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். 

                                                 ****************

2020 ஆம் ஆண்டில் இந்திய கடலோர காவல் படை நடத்திய சோதனையில் ரூ.1,500 கோடி தடை செய்யப்பட்ட கடற்பொருள்களும் 10 வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கடலோர காவல்படை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

                                                 ****************

கொரோனா பரவலின் போது சிறப்பாக செயலாற்றிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 86 -வது இடத்தில் உள்ளதாக  lowy institute நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 98 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் செயல்பாடு இராக், வங்கதேசத்தை விட மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

                                                 ****************

தில்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்புச்சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 2 நபர்களை டாக்சியில் இருந்து இறக்கி விட்ட ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

                                                 ****************

இந்தியாவின் சீரம் நிறுவனம் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மற்றொரு தடுப்பூசியை தயாரித்து ள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிப்பதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது. 

                                                 ****************

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொழிலதிபர் அனூப் குமார் குப்தாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

                                                 ****************
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை-மனித மோதலை தவிர்க்க, ஒலி எழுப்பியானையை விரட்டும் புதியதற்காப்பு கருவியை பண்ணாரி அம்மன் தொழில்நுட்கக் கல்லூரி பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

                                                 ****************

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருத்துவப்பொருட்கள் வாங்குவதற்காக நிதி திரட்ட பணக்காரர்களுக்கு சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.  

                                                 ****************

இந்தியாவில் இதுவரை 37.44 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்து றை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                                                 ****************

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேரின்குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார்.

;