india

img

ஓணம் பண்டிகை.... கேரள அமைச்சர்கள் வாழ்த்து....

ஓணம் பண்டிகையானது கேரளாவின் ஒரு மிக முக்கிய சிறப்புத் திருவிழாவாகும். உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள். ஓணம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கொண்டாடும் திருவிழாவாகும். நமது நாடும் மற்றும் நமது மாநிலமும் மிகச்சிரமமான காலத்தில் கடந்து கொண்டிருக்கிறது. இந்த சமூகத்தைப் பிளவுபடுத்த வெவ்வேறு சக்திகள் முயற்சித்து வருகின்றன. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஓணம் பண்டிகையின் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற செய்தியை நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.

கே.என்.பாலகோபால், நிதித்துறை அமைச்சர் கேரள அரசு 

                                       ****************

இந்த கோவிட் காலத்தில் மனதால் ஒன்றிணைந்து நாம் ஓணம் கொண்டாடுவோம்... மீண்டெழுவோம் நாம். இந்தக் காலமும் கடந்து போகும்... தீக்கதிர் வாசகர்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், உள்ளாட்சித்துறை, கிராம வளர்ச்சி மற்றும் கலால்துறை அமைச்சர் கேரள அரசு 

                                       ****************

மலையாளிகளின் தேசியத் திருவிழாவான ஓணம், சமத்துவத்துடன் அனைவரையும் பாதுகாத்த, நன்மைகள் மட்டுமே நிறைந்திருந்த ஒரு காலத்தின் மகத்தான நினைவூட்டுத்தலாகும். மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த ஓணம் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்ற நினைவூட்டலுடன் தீக்கதிர் தமிழ் நாளிதழின் அனைத்து மதிப்பிற்குரிய வாசகர்களுக்கும் இதயம்நிறைந்த ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸஜி செரியான், மீன்வளம்-துறைமுக இன்ஜினியரிங் கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கேரள அரசு 

                                       ****************

அனைத்து மலையாள மக்களுக்கும் சமத்துவம் சகோதரத்துவம் மற்றும் அன்புநிறைந்த  ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வகையான வண்ணப்பூக்களுடன் நமது அன்பிற்குரியவர்களும் ஒன்றுசேரும்போதுதான் பூக்கோலம் மேலும் அழகுவாய்ந்ததாகிறது. மனதால் நாம் ஒன்றிணையும்போது உலகளாவிய மனிதநேயம்  மலர்கிறது. அத்துடன் உலகளாவிய மனிதநேயப் பூக்கோலமிடுவதற்கு அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.ஏ.முகமது ரியாஸ், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கேரள அரசு 

;