india

img

சிறு,குறு விவசாயிகளுக்கு, விவசாயம் செய்யவே பொருளாதாரம் இல்லை

நாட்டில் உள்ள 86 சதவீத சிறு,குறு விவசாயிகளுக்கு, விவசாயம் செய்ய போதுமான அளவு பொருளாதாரம் இல்லை என நபார்டு வங்கி தலைவர் ஜி.ஆர். சிந்தாலா தெரிவிள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் பொருளாதார சங்கத்தின் 80-வது ஆண்டு ஆராய்ச்சி மாநாடு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் தலைமை வகித்தார். வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் கே.ஆர்.அசோக் வரவேற்புரை நிகழ்த்தினார். நபார்டு வங்கி தலைவர் ஜி.ஆர்.சிந்தாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். மாநாட்டில் வேளாண் மேம்பாட்டு நிறுவனங்கள், சந்தை வழி மேலாண்மை உள்ளடக்கிய உழவர் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் தொழிலாளர் திறன் மேம்பாடு, தொழிலாளர் உற்பத்தித் திறன் மற்றும் வேலைவாய்ப்பு, மலைத் தோட்ட பயிர்களின் வேளாண் வணிகம் மற்றும் சர்வதேச வணிக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பொருளாதார அறிஞர்கள், ஆராய்ச்சி முனைவர்கள் மற்றும்,மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். 

அதைத்தொடர்ந்து நபார்டு வங்கித் தலைவர் முனைவர் ஜி.ஆர்.சின்தாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
கொரோனாவால் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் விவசாயம் சிறப்பாக நடைபெற்றது. உற்பத்தி மற்றும் விநியோகம் நல்லமுறையில் இருந்தது. கொரானா காலத்தில் தான்  உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. விவசாயத்திற்கு உள்கட்டமைப்பு, கடன் வசதி, உற்பத்தி அவசியம். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு 2020-21 ஆண்டில் 15 லட்சம் கோடி ஓதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.12 லட்சம் கோடியை வழங்கி விட்டது. 2021-22-ம் ஆண்டில் ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்றுமதியை 30 மில்லியன் டாலரில் இருந்து 100 மில்லியன் டாலராக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 86 சதவீதம் சிறு, குறு விவசாயிகள் இருந்த போதிலும், விவசாயம் செய்வதற்கு அவர்களுக்கு போதுமான அளவு பொருளாதார வசதி இருப்பதில்லை. இதற்காக தற்பொழுது வரை 4600 உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 4 ஆண்டுகளில் இந்நிறுவனங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் வட்டி, உற்பத்தி செலவு இதன்மூலம் குறையும். கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறும் கடனை விவசாயிகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு நபார்டு வங்கி கைக்கொடுக்கும். 

;