india

img

காவிரி ஆற்றில் ஒரு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.

காவிரி ஆற்றில் ஒரு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு .

மைசூரு : தமிழக-கர்நாடக விவசாய மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது காவிரி ஆறு. கர்நாடகாவிலுள்ள கே.ஆர்.எஸ் என்றழைக்கப்படும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் , கபினி அணையிலிருந்தும் திருந்து விடும் தண்ணீர் , காவிரி ஆற்றில் பாய்ந்து தமிழகம் செல்கிறது . கடந்த சில தினங்களாக , இரு அணைகளிலும் , நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் தமிழகத்துக்குச் செல்லும் காவிரி ஆற்றில் வினாடிக்குப் பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. 

124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று 114.92 அடியாக இருந்தது. மேலும் , அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 882 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 5,260 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

இதேபோல் ,  2284 அடி உயரம் கொண்ட கபினி அணை நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 2279.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 610 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆகவே , இரு அணைகளிலிருந்தும் வினாடிக்கு 10,260 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிற்குத் திறந்துவிடப்பட்டது. 

;