india

img

ஹவாலா மோசடியில் ஈடுபட்டேனா..? முதல்வர் மம்தா பொய் சொல்கிறார்.. மேற்குவங்க ஆளுநர் தன்கர் தன்னிலை விளக்கம்....

கொல்கத்தா:
“ஆளுநர் ஜக்தீப் தன்கர் ஒரு ஊழல் பேர்வழி.. 1996-ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய ஹவாலா மோசடி குற்றப்பத்திரிக்கையில் தன்கரின் பெயர் இருக்கிறது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பை ஏற்படுத்திஇருந்தார்.“இந்த ஆளுநரை நீக்குங்கள் என்று ஒன்றிய அரசுக்கு 3 கடிதம் எழுதி விட்டேன்” என்றும் அவர் கூறியிருந்தார்.இந்நிலையில், மம்தாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆளுநர் ஜக்தீப் தன்கர், தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகளில் துளியளவும் உண்மை இல்லை. இது உண்மைக்கு புறம்பானது என்பதுடன், தவறான தகவல்களை அவர் மக்களிடையே பரப்புகிறார்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், இதுபோன்ற நடவடிக்கை களில் ஈடுபடுவது முறையல்ல. ஹவாலா வழக்கு தொடர்பான எந்த குற்றப்பத்திரி கையிலும், என் பெயர் இடம்பெறவில்லை. என் இளைய சகோதரியான மம்தாவின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஹவாலா பரிமாற்றம் மூலம் பெற்றதாக 1996-இல் குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, வி.சி.சுக்லா, சரத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களின் பெயர்கள் அடிபட்டன என்பது குறிப்பிட த்தக்கது.

;