india

img

மேற்குவங்க கலாச்சாரம் தில்லி தலைமைக்கு புரிபடவில்லை.... அறிவில்லாத நடிகர்கள், பெண்களை நம்பி தேர்தலில் தோற்று விட்டது..... பாஜக மூத்த தலைவர் ததகதா ராய் கொதிப்பு.....

கொல்கத்தா:
மேற்கு வங்க கலாச்சாரம்மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றி பாஜகவின் தில்லிதலைமைக்கு ஒன்றும் தெரியவில்லை என்றும், அதனால் தான் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டியும், அறிவில்லாத நடிகர்கள் மற்றும் பெண்களை நம்பி பாஜக தோற்றுப் போய் விட்டது என்றும் அக்கட்சியின் மூத்த தலை வரும், திரிபுரா மற்றும் மேகாலயா மாநில முன்னாள் ஆளுநருமான ததகதா ராய் கொதித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

‘மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது துரதிருஷ்டவசமானது. முன்பு 3 இடங்களில் மட்டும்வெற்றி பெற்றிருந்த நாங்கள்இப்போது 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இதுஒரு நல்ல முன்னேற்றம்தான். ஆனால் இது போதாது.ஆளும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த ஒரு சிலர், தோல்வி ஏற்படுத்தும் நோக்கத்திலேயே பாஜக-வில் இணைந்தனர். பாஜகவும் இவர்களுக்குத் தேர்தல்வாய்ப்பு அளித்தும் எக்கச்சக்கமான பணம் செலவு செய்தும் கடைசியில் தோற்றுவிட்டது. திரிணாமுல் கட்சியிலிருந்து வந்தவர்களால் பாஜகவின் உண்மையான தொண்டர்கள் பலருக்கு தேர்தல் வாய்ப்பு கிடைக்காமல் போனது.தில்லி தலைமைக்கு மேற்கு வங்க கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அதனால்தான் நடிகர்களாக இருந்து அரசியல் வாதி ஆன பலருக்கு தேர்தல்வாய்ப்பு வழங்கி விட்டது.இவர்கள் கலை உலகில் அறிவாளிகளாக இருந்தாலும் அரசியல் உலகில் முட்டாள்கள் மட்டுமே ஆவார்கள். அது மட்டுமின்றி பெண்கள் முன்னேற்றம் எனக்கூறி ஒரு சில அரசியல் ஞானமற்ற பெண்களுக்கும் பாஜக வாய்ப்பளித்து, பெரிய அளவிற்கு தவறு செய்து விட் டது.இவை எல்லாமே இன்று பாஜகவின் தோல்விக்குக் காரணமாகி விட்டன. இவ்வாறு ததகதா ராய் பேசியுள்ளார்.

;